பிரபல இ-காமர்ஸ் நிறுவனமான அமேசானின் இணையதளத்தில் இந்திய தேசியக் கொடி தாங்கிய டி-ஷார்ட்ஸ் மற்றும் ஷூக்கள் இடம்பெற்றிருந்தன. அமேசான் மூவர்ணக் கொடியை அவமதிக்கும் வகையில் அமேசானின் செயல் இருப்பதாக பலரும் விமர்சித்துள்ளனர். அமேசான் நிறுவனத்திற்கு எதிராக, குறிப்பாக சமூக வலைதளங்களில் பலர் கடுமையான கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
இந்நிலையில், அமேசான் நிறுவனம் மீது வழக்குப்பதிவு செய்ய மத்திய பிரதேச டிஜிபிக்கு மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. தேசியக் கொடி சட்டத்தை மீறியதாக அமேசான் மீது எப்ஐஆர் பதிவு செய்யுமாறு டிஜிபிக்கு மத்தியப் பிரதேச உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா உத்தரவிட்டுள்ளார்.