நெதர்லாந்தின் ஆம்ஸ்டர்டாமில் நகரைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் நீடில் இல்லாத ஊசியை வடிவமைத்துள்ளனர்.
நீடில் இல்லாத இந்த ஊசியில் ஒரு சிறிய லேசர் பொருத்தப்பட்டுள்ளது. இதன் வழியாக மருந்து நொடியில் உடலுக்குள் செலுத்தப்படுகிறது. தோல் பகுதியில் உள்ள மிகச் சிறிய துவாரங்களை பயன்படுத்தி லேசர் மூலம் மருந்து செலுத்தப்படுவதால் மிகக் குறைந்த நேரத்திலேயே இந்த ஊசி மருந்தை உடலுக்குள் செல்கிறது. இந்த நீடில் இல்லாத லேசர் ஊசியில் எந்தவித வலியும் இருக்காது என்பதால் எதிர்காலத்தில் மக்கள் இந்த ஊசியை விரும்புவார்கள் என ஆராய்ச்சியாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இந்த லேசர் ஊசி விரைவில் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.