நீலகிரி மாவட்டம் மன்னார்குடியில் 20 நாட்களாக தேடப்பட்டு வந்த புலியை வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர்.
நீலகிரி மாவட்டம் கூடலூர் மசினகுடி சிங்கார பகுதிகளில் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக ஒற்றை புலி ஒன்று குடியிருப்புக்குள் புகுந்து பொதுமக்கள் மற்றும் கால்நடைகளை தாக்கிக் கொண்டு அட்டகாசத்தில் ஈடுபட்டு வருகிறது.
இதனால் பீதி அடைந்த மக்கள் புலியை பிடிக்க கோரிக்கை வைத்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து வனத்துறையினர் மூன்று மோப்ப நாய்கள் மற்றும் இரண்டு கும்கி யானைகள் உதவியுடன் புலியை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
மேலும் அப்பகுதி முழுவதும் கண்காணிப்பு கேமரா பொருத்தி வனத்துறையினர் புலியை பிடிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.
இந்தநிலையில் மசினகுடி சாலையில் நேற்று இரவு 10 மணி அளவில் நடந்து சென்ற அந்த T23 புலி மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டது.
இதனால் மகிழ்ச்சி அடைந்த பொதுமக்கள் வனத்துறையினருக்கு தங்களது நன்றிகளை தெரிவித்தனர்.