திருவாடானை அருகே வழிப்பறி கொள்ளையில் ஈடுபட முயன்ற 16 வயது சிறுவன் உட்பட 9 பேர் கைது செய்யப்பட்டனர். ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே உள்ள தனியார் லாட்ஜில் சந்தேகப்படும் வகையில் 9 பேர் தங்கியிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், அந்த 9 பேரையும் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று நடத்திய விசாரணையில், அவர்கள் காரைக்குடி சுற்றுவட்டாரப் பகுதிகளை சேர்ந்தவர்கள் என்பதும், தொண்டியில் உள்ள தனியார் லாட்ஜில் அறை எடுத்து தங்கி வழிப்பறியில் ஈடுபட திட்டம் தீட்டியது தெரிய வந்தது. இதனையடுத்து 9 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து அரிவாள்கள், கத்திகள் மற்றும் கார் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்…