கேரளா மாநிலத்தில் மேலும் 7 பேருக்கு நிபா வைரஸ் அறிகுறி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அவர்களின் இரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதனைக்காக அனுப்பட்டுள்ளன. மேலும் ஏழு பேரின் சோதனை முடிவுகள் இன்று கிடைக்கும் இந்த பரிசோதனை முடிந்த பிறகு அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் கேரள சுகாதார துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.