திருச்சியில் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்காததைக் கண்டித்து முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது.
மணப்பாறை அருகே உள்ள அயன்பொருவாய் பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் சுமார் 50 க்கும் மேற்பட்டோர் கடந்த 2007 ம் ஆண்டுக்கு முன்பிருந்தே மின்வாரியத்தில் விவசாயத்திற்கான இலவச மின் இணைப்புக் கேட்டு பதிவு செய்திருந்தனர். தற்போது தமிழக முதல்வர் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கும் திட்டத்தை துவக்கி வைத்த நிலையில் அயன்பொருவாய் பகுதியைச் சேர்ந்தவர்களும் இதில் முன்னுரிமை அடிப்படையில் இலவச மின்சாரம் பெருவதற்கான பயனாளிகளாக சேர்க்கப்பட்டு அதற்கான கடிதம் விவசாயிகளுக்கு மின் வாரியத்தால் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. ஆனால் அவர்களுக்கு இலவச மின்சாரம் வழங்கப்படாது என அதிகாரிகள் கூறியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த பாதிக்கப்பட்ட விவசாயிகள் இலவச்ச மின்சாரம் வழங்காத்தை கண்டித்து மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்திற்கு முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.