அதிமுக ஆட்சியில் ஒரு அமைச்சர் கூட முல்லை பெரியாறு அணையை ஆய்வு செய்யவில்லை – அமைச்சர் துரைமுருகன்

முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 138.80 அடியாக உள்ள நிலையில், தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், கூட்டுறவுத்துறை அமைச்சர் இ.பெரியசாமி, வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி, உணவு வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஆகியோர் அணையை ஆய்வு செய்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் துரைமுருகன்,

ஓபிஎஸ் தனது சொந்த ஊருக்கு அருகில் உள்ள முல்லை பெரியாறு அணைக்கு இதுவரை சென்று பார்வைத்திட்டத்திலை. அவர்கள் இப்போது போராட்டம் செய்கிரார்கள்கா..?

கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் ஒரு அமைச்சர் கூட முல்லை பெரியாறு அணையை ஆய்வு செய்யவில்லை. முல்லை பெரியாறு அணை பற்றி பேச எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ.பன்னீர்செல்வத்துக்கும் எந்த தார்மீகமும் இல்லை. நான் 80 வயதிலும் நேரில் சென்று ஆய்வு செய்தேன்.

30 ஆண்டு சராசரி கணக்கின்படி, முல்லை பெரியாறு அணையில் நவம்பர் 30ஆம் தேதி 142 அடி வரை தண்ணீர் தேக்க முடியும்.என்றார்.

Translate »
error: Content is protected !!