யூடியூப்பில் ஓ.சொல்றியா பாடலின் தெலுங்கு வெர்சனை 3 கோடியே 40 லட்சம் பேர் பார்த்துள்ளனர்.
சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘புஷ்பா’ படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இரண்டு பாகங்களாக வெளியாகவுள்ள இந்த படத்தில் ஃபகத் பாசில், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலர் அல்லு அர்ஜுனுடன் இணைந்து நடித்துள்ளனர். அண்மையில் இப்படத்தில் இருந்து ஆண்களை விமர்சித்து எழுதப்பட்டுள்ள ஓ..ஆண்டவா…ஓ.. ஆண்டவா என்ற பாடல் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இந்த நிலையில் யூடியூப்பில் இந்த பாடலை 3 கோடியே 40 லட்சம் பேர் பார்த்துள்ளனர். இதே பாடலின் தமிழ் வெர்சனான ஓ…சொல்றியா மாமா… பாடலை 70 லட்சம் பேர் பார்த்துள்ளனர்.