தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் கொரோனாவின் தாக்கம் படிப்படியாக அதிகரித்து வருகிறது. கடந்த 10 நாட்களில் மட்டும் சென்னையில் தினசரி பாதிப்பு 146ல் இருந்து 776 ஆக 5 மடங்கு அதிகரித்துள்ளது. சென்னையில் 1158 தெருக்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் கண்டறியப்பட்டுள்ளதாக மாநகராட்சி அறிவித்துள்ளது.
சென்னையில் மொத்தம் உள்ள 39,537 தெருக்களில் 1158 தெருக்களில் கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
170 தெருக்களில் 3க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
86 தெருக்களில் 4க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
51 தெருக்களில் 5க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
988 தெருக்களில் 3 பேருக்கும் குறைவானவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னையில் மொத்தம் 3486 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சென்னையில் உள்ள 38,379 தெருக்களில் எவருக்கும் கொரோனா பாதிப்பு கண்டறியப்படவில்லை.
தேனாம்பேட்டை மண்டலத்தில் அதிகபட்சமாக 228 தெருக்களில் நோய்த்தொற்றுகள் கண்டறியப்பட்டுள்ளன.
கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருவதால் தமிழக அரசு முக்கிய நடவடிக்கைகளை எடுக்கும் என்று தெரிகிறது. கடற்கரைக்கு செல்ல தடை, திரையரங்கில் 50% இருக்கைகள் என ஏற்கனவே கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.