டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கல்!

டாஸ்மாக் ஊழியர்களுக்கு 500 ரூபாய் ஊதிய உயர்வு அறிவித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

சட்டப்பேரவை மானியக்கோரிக்கை அறிவிப்பின் போது, டாஸ்மாக் ஊழியர்களுக்கு ரூ.500 சம்பள உயர்வு வழங்கப்படும் என அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்திருந்தார். அதன்படி, அதற்கான உத்தரவை டாஸ்மாக் நிர்வாகம் வெளியிட்டுள்ளது. அந்த வகையில்,மேற்பார்வையாளருக்கு ரூ.12,750ல் இருந்து ரூ.13,250 ஆகவும்,விற்பனையாளர்களுக்கு ரூ.10,600இல் இருந்து ரூ.11,100 ஆகவுன், உதவி விற்பனையாளர்களுக்கு ரூ.9,500ல் இருந்து ரூ.10,000 ஆகவும் ஊதியம் உயர்த்தப்பட்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும், உயர்த்தப்பட்ட ஊதியம் ஏப்ரல் 1-ம் 2021 முதல் முன் தேதியிட்டு வழங்கப்படும் என்றும், முறையாக வழங்கப்படுகிறதா என்பதை முதுநிலை மண்டல மேலாளர்கள் மாவட்ட மேலாளர்கள் உறுதி செய்ய வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Translate »
error: Content is protected !!