அரசியல் கட்சித் தலைவர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் நீதிபதிகள் உட்பட பலரின் செல்போன்கள் இஸ்ரேலிய அரசாங்கத்தால் தயாரிக்கப்பட்ட பெகாசஸ் ஸ்பைவேர் மூலம் ஒட்டுகேட்கப்பட்டன. இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
பெகாசஸ் ஒட்டுக்கேட்பு குறித்து ஆராய ஒரு நிபுணர் குழுவை அமைக்க உச்ச நீதிமன்றம் முடிவு செய்துள்ளது. இந்த குழு குறித்த விரிவான உத்தரவு அடுத்த வாரம் வெளியிடப்படும் என்று தலைமை நீதிபதி ரமணா கூறினார்.