பட்டாசுக்கு தடை விதிக்கக் கோரிய மனு.. நாளை ஒத்திவைப்பு – உச்ச நீதிமன்றத்தில்

பட்டாசுக்கு தடை விதிக்கக் கோரிய மனுவும், பட்டாசு வெடிக்கும் நேரத்தை அதிகரிக்கக் கோரிய மனுவும் உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.

நீதிபதி எம்.ஆர்.ஷா தலைமையில் நடந்த விசாரணையில், பசுமை பட்டாசு தயாரிப்பில் முறைகேடுகள் நடைபெறவில்லை என பட்டாசு உற்பத்தியாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், தனி நபர் மகிழ்ச்சிக்காக பட்டாசுகளை மற்றவர்களின் உடல் நலம் மற்றும் உயிருக்கு கேடு விளைவிப்பதை அனுமதிக்க மாட்டோம். மக்களின் அடிப்படை உரிமைகளை நிலைநாட்ட நீதிமன்றம் உள்ளது என்றார்கள்.

மேலும், விதிமீறல் இல்லை என பட்டாசு உற்பத்தியாளர்கள் கூறியது முற்றிலும் தவறானது என்றும், விதிமீறல் தொடர்பான ஆய்வு முடிவுகள் இருப்பதாக கூறி வழக்கு நாளை ஒத்திவைக்கப்பட்டது.

Translate »
error: Content is protected !!