மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் ராமேஸ்வர் தெலி, நேற்று மாநிலங்களவையில், கடந்த 5 ஆண்டுகளில் பெட்ரோல், டீசல் விற்பனை மூலம் கிடைத்த வரி வருவாய் விவரங்களை கேள்விக்கு பதிலளித்தார்.
அதன்படி, கடந்த 2020-2021ஆம் நிதியாண்டில் பெட்ரோல், டீசல் விற்பனை மூலம் மத்திய அரசு வரியாக வசூலித்த தொகை ரூ. 4 லட்சத்து 55 ஆயிரத்து 69 கோடி என தெரியவந்துள்ளது
அதேபோல் தமிழக அரசும் அதே நிதியாண்டில் விற்பனை வரி மற்றும் மதிப்பு கூட்டு வரியாக 17 ஆயிரத்து 63 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. புதுச்சேரி 10 கோடி வசூலித்துள்ளது. மராட்டியம் மற்றும் உத்தரபிரதேசத்திற்கு அடுத்தபடியாக அதிக வரி வசூல் செய்யும் மாநிலங்களில் தமிழகம் இரண்டாவது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.