ரயில் தண்டவாளங்களில் நின்று புகைப்படம்

 

வாணியம்பாடி அருகே ஆபத்தை உணராமல் ரெயில் தண்டவாளங்களில் நின்று புகைப்படம் எடுத்து சிறுவர்கள் மகிழ்கின்றனர். திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி ரெயில் நிலையம் அருகே சிறுவர்கள் சிலர், ரெயில் தண்டவாளத்தில் அமர்ந்துகொண்டு புகைப்படம் மற்றும் செல்பி எடுப்பதை வாடிக்கையாக வைத்துள்ளனர். இது போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது என்று ரெயில்வே போலீசார் பலமுறை அறிவுரை வழங்கியும், தொடர்ந்து இதுபோன்றுஆபத்தை உணராமல் சிறுவர்கள் செயல்பட்டு வருகின்றனர். சென்னை, கோவை, பெங்களூரு ஆகிய பகுதிகளில் இருந்து இரு வழிப்பாதைகளிலும் நாளொன்றுக்கு சுமார் 120-க்கும் மேற்பட்ட பயணிகள் மற்றும் சரக்கு ரெயில்கள் செல்கின்றன. அப்போது, சிறுவர்கள் புகைப்படம் எடுப்பதால் விபத்து ஏற்பட அதிக வாய்ப்புள்ளதாகவும்,  உடனடியாக அப்பாதையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் எனவும், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Translate »
error: Content is protected !!