உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்-க்கு எதிராக நாடாளுமன்றத்தில் சிறப்புரிமை நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், ராஜ்யசபா நியமன உறுப்பினராக உள்ளார்.
இந்த நிலையில் கடந்த டிசம்பர் 9 ஆம் தேதி தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த அவர், கொரோனா கட்டுப்பாடுகள் மற்றும் சமூக இடைவெளி இல்லாததால் ராஜ்யசபா கூட்டத்தில் பங்கேற்கவில்லை என கூறியதாக தெரிகிறது. இந்த கருத்துக்கு எதிராக சிறப்பு உரிமை மீறல் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என ராஜ்யசபாயில் திரிணமுல் காங்கிரஸ் எம்.பி.,க்கள் சிறப்புரிமை ‘நோட்டீஸ்’ தாக்கல் செய்துள்ளனர். அதில், நீதிபதி ரஞ்சன் கோகாயின் அறிக்கைகள் மாநிலங்களவையை அவமதிப்பதாகவும், சபையின் கண்ணியத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்துவதாகவும், சிறப்புரிமையை மீறுவதாகவும் உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.