தமிழகத்தில் வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டம் படுதோல்வி- அண்ணாமலை

வேளாண் சட்டங்களுக்கு எதிரான எதிர்க்கட்சிகளின் போராட்டம் தமிழகத்தில் படுதோல்வியை சந்தித்துள்ளதாக பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள அவர், மத்திய அரசின் விவசாயிகளுக்கு நன்மை பயக்கும், விவசாயிகளை வியாபாரிகளாக மாற்றும் மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியது தமிழக அரசு. இன்று திமுக,காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் விவசாய சட்டங்களை எதிர்த்து கடையடைப்பு போராட்டத்தை அறிவித்திருந்தது. ஆனால் போராட்டம் படுதோல்வியடைந்ததோடு, சில அரசியல்கட்சிகளைத் தவிர எந்தவொரு விவசாயிகளும் சாலையில் இறங்கி வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட தயாராக இல்லை என குறிப்பிட்டிருந்தார்.

25 ஆண்டு காலம் தமிழகத்தில் ஆட்சி செய்த திராவிட முன்னேற்றக் கழகம் விவசாயிகளின் வாழ்வில் எவ்வித மாற்றத்தையும் கொண்டுவரவில்லை. ஆனால் மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, வெற்று ஆர்ப்பாட்ட அரசியல் செய்யும் திமுக விவசாயிகளுக்கு மாபெரும் துரோகத்தை இழைத்துக்கொண்டிருக்கிறது. வேளாண் சட்டங்களை புறக்கணிக்கும் தமிழக முதல்வர் விவசாயிகளின் இன்றைய நிலைக்கு என்ன தீர்வு தான் தரப்போகிறார் என்பதை வெள்ளை அறிக்கையாக தரவேண்டும் எனவும் அறிக்கையில் அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.

Translate »
error: Content is protected !!