மருத்துவ உதவிகளை தந்து, நாட்டின் இறையாண்மையை காக்க உதவும்படி இந்தியாவிடம் உக்ரைன் எம்.பி சோபிா ஃபெடினா கேட்டுக்கொண்டுள்ளார்.
உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷ்யா, அங்குள்ள கேர்சின் பகுதியில் ராணுவத்தின் உதவியுடன் தேசியக்கொடியை ஏற்றி கால்தடம் பதித்துள்ளது. இதனிடையே நேற்றைய போரில் இரு தரப்பிலிருந்தும் ஏராளமானோர் உயிரிழந்ததாக சொல்லப்படுகிறது.
இந்தநிலையில் பிரபல ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்த உக்ரைன் எம்.பி சோபியா ஃபெடினா, இந்தியாவிடம் இருந்து ஆயுத உதவி மட்டுமல்லாது ரஷ்யாவுக்கு எதிராக மனதை திடப்படுத்திக்கொள்வதற்கான மருத்துவம் சார்ந்த உதவிகளையும் எதிர்பார்ப்பதாக கூறியுள்ளார். எனவே நாட்டின் இறையாண்மையை பாதுகாக்க இந்திய அரசியல் தலைவர்கள் உதவிகரம் நீட்டும் படியும் வருந்திக்கேட்டுக்கொண்டுள்ளார்.