தமிழகத்தில் கடந்த 4 நாட்களாக தொடர்ந்து பெய்து வந்த கனமழையால் சென்னை உட்பட பல்வேறு இடங்களில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறார். மேலும் நிவாரண பொருள்களையும் வழங்கி வருகிறார்.
அதன்படி, கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி ஊராட்சி ஒன்றியம், அரங்கமங்கலம் ஊராட்சிக்குட்பட்ட மாருதிநகர் பகுதியில் வெள்ள பாதிப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்து வருகிறார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா, பசுமை வீடு கட்டுவதற்கான ஆணை, நிவாரண உதவிகளை வழங்கினார்.