பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த ஓட்டப்பந்தய வீராங்கனையான சிறுமி குறித்து தனக்கு
தகவல் அளிக்குமாறு இந்தியாவின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங்
கேட்டுக்கொண்டுள்ளார். பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த ஓட்டப்பந்தய வீராங்கனையான
11 வயது சிறுமி ரியா புல்லோஸ் கடந்த டிசம்பர் 9- ம் தேதி நடந்த 400, 800, 1,500 மீட்டர்
போட்டிகளில் கலந்து கொண்டு பதக்கம் வென்றார். இந்த 3 சுற்றுகளிலும் பங்கேற்ற
போது வெறும் கால்களில் பேண்டேஜ்களை கொண்டு ஷூ மாதிரியான ஒன்றை தயார்
செய்து அவரது குடும்பத்தினர் கொடுத்துள்ளனர். இதுகுறித்தான செய்திகள் வெளியானதை
அறிந்த ஹர்பஜன் சிங், சிறுமி ரியா புல்லோஸ் குறித்து தகவல் அளித்தால் அவரது
விளையாட்டு மற்றும் கல்வி செலவுகளை தாம் ஏற்பதாக டிவிட்டர் பக்கத்தில்
பதிவிட்டுள்ளார்.
Like this:
Like Loading...