குடியரசு தின விழா கொண்டாட்டங்கள் ஜனவரி 23-ம் நாளில் இருந்தே தொடங்கும் என தகவல்

குடியரசு நாள் கொண்டாட்டங்கள் இனி ஜனவரி 23ஆம் நாளில் இருந்தே தொடங்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய அரசியலமைப்புச் சட்டம் 1950-ம் ஆண்டு ஜனவரி 26-ம் தேதி நடைமுறைக்கு வந்தது.அன்றிலிருந்து ஆண்டுதோறும் ஜனவரி 26-ம் தேதி குடியரசு தினமாகக் கொண்டாடப்படுகிறது.

ஜனவரி 24-ம் நாளே அதற்கான கொண்டாட்டங்கள் தொடங்கி நடைபெறும். இந்நிலையில் இந்நிலையில், நேதாஜி சுபாஷ் சந்திரபோசின் 125வது பிறந்தநாளை முன்னிட்டு அவரைச் சிறப்பிக்கும் வகையில் இந்த ஆண்டு முதல் குடியரசு தின விழா ஜனவரி 23ஆம் நாளில் இருந்தே தொடங்கும் என அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Translate »
error: Content is protected !!