சேலம் மாவட்டத்தில் கடந்த சில மாதத்துக்கு முன் இரவு நேரங்களில் மழை பெய்து வந்தது குறிப்பாக ஏற்காட்டில் நாள் தோறும் இரவு நேரங்களில் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் ஏற்காடு மலைப் பாதையில் இரண்டாவது கொண்டை ஊசி வளைவு அருகே மண் சரிவு ஏற்பட்டது.
சாலை மற்றும் தடுப்பு சுவர் கற்கள் சரிந்து கீழ் சாலையில் விழுந்த காரணத்தால் வாகன போக்குவரத்துக்கு முற்றிலுமாக தடை தடைப்பட்டது.
மண் சரிவு குறித்து தகவல் அறிந்த நெடுஞ்சாலைத்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து சீரமைப்பு பணியில் ஈடுபட்டு தற்காலிகமாக மணல் மூட்டை அடுக்கி வைத்தனர்.
அது அப்படியே விட்டு விட்டதால் நாள் தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் மலைப் பாதையில் செல்கின்றன மற்றும் கனரக வாகனங்கள் தினந்தோறும் பயணிப்பதாலும் ஏற்காட்டில் சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதாலும் மீண்டும் அந்த இடம் சரியும் அபாயம் உள்ளது.
வாகன ஓட்டிகள் சுற்றுலாப் பயணிகள் அச்சத்துடன் இடத்தை கடந்து செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் உடனடியாக பொதுமக்கள் சுற்றுலா பயணிகள் அச்சத்தை போக்கும் வகையில் சரிந்த இடத்தை புதுப்பித்து தரும்படி கோரிக்கை வைத்துள்ளனர்.
மேலும் ஒரு வாகனம் செல்லும் பொழுது மறுவாகனம் நிறுத்தி செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது .
ஏற்காட்டில் இரவு நேரங்களில் தொடர்ந்து மழை பெய்து கொண்டு உள்ளதால் எப்பொழுது வேண்டுமானாலும் மணல் மூட்டைகள் சரியும் அபாயம் உள்ளதால். உடனடியாக மணல் மூட்டைகளை அகற்றி புதிய சுவர் அமைத்து மக்களின் அச்சத்தை போக்கும் வகையில் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் முன் வர வேண்டுமென்று வாகன ஓட்டிகள். சுற்றுலா பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.