கடும் வெள்ளத்தில் காப்பாற்றப்படும் குழந்தை, தாய் – வீடியோவை பகிர்ந்து முதலமைச்சர் நெகிழ்ச்சி

சேலத்தில் கடும் வெள்ளப்பெருக்கிலிருந்து குழந்தை மற்றும் தாயை காப்பாற்றிய நபர்களுக்கு பாராட்டுகளை தெரிவித்துள்ளார் முதலமைச்சர் முக ஸ்டாலின். சேலத்தின் ஆத்தூர் அருகே அமைந்துள்ள ஆனைவாரி முட்டல் நீர்வீழ்ச்சியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படுகிறார்கள். விடுமுறை நாட்களில் இங்கு கூட்டம் அதிகமாக இருக்கும், இந்நிலையில் ஆட்கள் குளித்துக் கொண்டிருந்த போது, திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் குழந்தை, பெண் உள்பட 4 பேர் சிக்கி கொண்டனர். அவர்கள் அங்கிருந்து தப்பிக்க நீர்வீழ்ச்சியின் இடது புறமாக உள்ள பாறை மீது ஏறினர். அப்போது அவர்களை வனத்துறையினர் காப்பாற்றினர், இதனை அங்கிருந்த நபர் ஒருவர் வீடியோவாக எடுத்து வெளியிட வைரலாக பரவியது. இந்த வீடியோவை பகிர்ந்துள்ள முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தாயையும் சேயையும் காப்பாற்றியவர்களின் தீரமிக்க செயல் பாராட்டுக்குரியது; அரசால் சிறப்பிக்கப்படுவார்கள். தன்னுயிர் பாராது பிறரது உயிர் காக்க துணிந்த அவர்களது தீரத்தில் மனிதநேயமே ஒளிர்கிறது! பேரிடர்களின்போது பொதுமக்கள் கவனமுடன் இருக்க வேண்டும். பண்புடையார்ப் பட்டுண்டு உலகம்! என தெரிவித்துள்ளார்.

Translate »
error: Content is protected !!