சாலையில் விழுந்த ராட்சத பாறை – வெடிவைத்து தகர்ப்பு

சேலம் மாவட்டம் ஏற்காடு மலைப்பாதையில் நேற்றிரவு சரிந்து விழுந்த ராட்சத பாறை ஒன்றை அதிகாரிகள் வெடிவைத்து தகர்த்தனர். சேலத்திலிருந்து ஏற்காடு செல்லும் பிரதான சாலையில் சுமார் 200 டன் எடை கொண்ட ராட்சத பாறை ஒன்று நேற்றிரவு சரிந்து விழுந்தது. தகவல் அறிந்த நெடுஞ்சாலைத்துறை, பொதுப்பணித்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் பாறையை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். பெரிய அளவிலான பாறை என்பதால் அதனை உடைத்து அகற்றுவதில் சிரமம் ஏற்பட்டது. அதனால், பாறையில் 30 இடங்களில் துளையிடப்பட்டு வெடிமருந்து நிரப்பி அதனை வெடிக்க செய்து பாறையை அகற்றினர்.

Translate »
error: Content is protected !!