வானிலை தகவல்

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, 21.09.2022 முதல் 23.09.2022 வரை: மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்கள், தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான/மிதமான மழை பெய்யக்கூடும்.…

திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் சாதுக்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள மலையை சுற்றியுள்ள கிரிவலப்பாதையில் நாளுக்கு நாள் சாதுக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. இதனிடையே கிரிவலப்பாதையில் போலி சாமியார்கள் நடமாட்டம், கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் விற்பனை அதிகரித்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து சாதுக்களுக்கு கியூஆர்…

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக தொடர்ந்த வழக்கு ரத்து

கொரோனா விதிகளை மீறி போராட்டத்தில் ஈடுபட்டதாக அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக தொடர்ந்த வழக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. வேளாண் சட்டங்களை எதிர்த்து கடந்த 2020-ல் திமுக சார்பில் மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்தப்பட்டது. கரூரில் நடந்த போராட்டத்தில் கொரோனா விதிகளை பின்பற்றவில்லை…

மாண்புமிகு நீதிபதிக்கு மக்களின் பாராட்டு குவிக்கிறது

சென்னை புரசைவாக்கம் சிவசண்முகபுரத்தைச் சேர்ந்தவர் எல்லையம்மாள் (வயது 53). இவருக்கு குடிசை மாற்று வாரியத்தில் வீடு ஒதுக்கப்பட்டிருந்தது. வீட்டுக்கான பத்திரத்தைப் பெற ஓராண்டு ஈராண்டுகள் போராடவில்லை. கடந்த 1993ம் ஆண்டு முதல் 24 ஆண்டுகள் உரிமையாளர் பத்திரம் கேட்டு குடிசை மாற்று…

வீடு கட்ட தோண்டிய பள்ளத்தில் விழுந்து 6 வயது சிறுவன் உயிரிழப்பு

ஈரோடு மாவட்டம், அம்மாபேட்டை அருகே உள்ள ஊமாரெட்டியூர் சுந்தராம்பாளையம் காலனியை சேர்ந்தவர் முருகன் என்கிற குருசாமி. இவருக்கு புஷ்பராஜ் (13) அபினேஷ் (6) என்ற இரு மகன்களும் ஹர்த்திகா (3) என்ற மகளும் உள்ளனர். அபினேஷ் ஊமாரெட்டியூரில் உள்ள அரசு பள்ளியில்…

உயிரோடு இருக்கும் கணவருக்கு இறப்பு சான்று வாங்கிய மனைவி

உயிரோடு இருக்கும் தன்னை இறந்ததாக சான்று பெற்று, வாரிசு சான்றும் பெற்று சொத்து விற்பனை செய்த முன்னாள் மனைவி மற்றும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி கலெக்டரிடம் கணவர் சந்திரசேகர் 42, புகார் அளித்துள்ளார். சிவகங்கை மாவட்டம் கண்டனுார் கலாமந்திரம்…

அங்க அடையாளங்களை சேகரிக்கும் சட்டத்தை எதிர்த்து வழக்கு

அங்க அடையாளங்களை சேகரிக்கும் சட்டத்தை எதிர்த்து வழக்கு தொடர்பாக மத்திய அரசு பதில் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. சென்னை ஐகோர்ட்டில் திருவொற்றியூரைச் சேர்ந்த ஆதர்ஷ் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், ‘குற்ற வழக்குகளில் கைது செய்யப்படுபவர்கள், தண்டிக்கப்படுபவர்கள், தடுப்பு காவலில் வைக்கப்படுபவர்களின்…

புதுச்சேரியில் இரு அரசுப் பள்ளி மாணவிகள் இடையே மோதல்

புதுச்சேரியில் இரு அரசுப் பள்ளி மாணவிகள் இடையே மோதல் ஏற்பட்டதை அடுத்து, குருசுகுப்பம் அரசுப் பள்ளிக்கு 4 நாட்கள் விடுமுறை விடப்பட்டுள்ளது. இது குறித்து அமைச்சர் நேரடியாக விசாரணை நடத்தினார். புதுச்சேரி சுப்பிரமணிய பாரதியார் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியின் பழமையான…

28 லட்சம் மாணவர்களுக்கு இலவச பஸ்பாஸ்: தமிழக அரசு

தமிழக பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் 28 லட்சம் மாணவர்கள் அரசு பேருந்தில் இலவசமாக பயணம் செல்ல புதிய இலவச பஸ்பாஸ் அட்டை அடுத்த இரண்டு வாரத்தில் வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார்…

புதுச்சேரியில் தீவிரமாக பரவும் ஃப்ளூ காய்ச்சல்

தீவிரமாக காய்ச்சல் பரவுவதால் புதுச்சேரி, காரைக்காலில் 215 குழந்தைகள், பெரியவர்கள் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டுள்ளனர். வெளிப்புறப் பிரிவில் 559 பேருக்கு சிகிச்சை தரப்பட்டுள்ளது. புதுச்சேரியில் ஃப்ளூ காய்ச்சல் தீவிரமாக பரவி வருகிறது. இந்தக் காய்ச்சல் குழந்தைகளை அதிகளவில் பாதிக்கிறது. இதனால், கல்வித் துறை…

Translate »
error: Content is protected !!