மகாராஷ்டிராவின் மொத்த சந்தையில் தக்காளி விலை கிலோ ஒன்றுக்கு ரூ.2-3 வரை விலை சரிந்தது. இதனால் வருத்தம் அடைந்த விவசாயிகள் நேற்று சாலையில் தக்காளியை கூடைகளுடன் கொட்டினர். வண்டி வாடகை செலவுக்கு கூட ஈடாக விற்பனை விலை இல்லாதது விவசாயிகளை வருத்தத்தில்…
Tag: Tamil News
மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 206 புள்ளிகள் சரிவு
மும்பை: இன்று இந்திய பங்குச்சந்தை வர்த்தகம் துவங்கியது. மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 206 புள்ளிகள் குறைந்து 55,743 ஆக உள்ளது. தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி குறியீடு எண் 52 புள்ளிகள் குறைந்து 16,585 ஆக உள்ளது.
உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 21.54 கோடியாக உயர்வு
உலகளவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 21.54 கோடியைத் தாண்டியுள்ளது. கொரோனாவிலிருந்து 19.26 கோடிக்கும் அதிகமானோர் மீண்டுள்ளனர். மேலும், இதுவரை 44.87 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். 1.83 கோடிக்கும் அதிகமானோர் வைரஸுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 44,658 பேருக்கு கொரோனா
இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 44,658 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், நாட்டில் மொத்த கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3 கோடியே 26 லட்சத்து 3 ஆயிரம் 188 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில்…
பாகிஸ்தானின் போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 7 பயங்கரவாதிகள் பலி
பாகிஸ்தானின் லோரலை மாவட்டத்தின் கோஹர் அணை பகுதியில் பயங்கரவாதிகளை தேடும் பணியில் போலீசார் நேற்று ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகளுக்கும் போலீசாருக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடந்தது. இந்த சண்டையில் 7 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். 3 பேர்…
திருச்செந்தூர் முருகன் கோயிலில் நாளை முதல் செப்டம்பர் 5 வரை பக்தர்களுக்கு தடை..!
திருச்செந்தூர் முருகன் கோயிலில் நாளை முதல் செப்டம்பர் 5 வரை பக்தர்களுக்கு அனுமதியில்லை என தூத்துக்குடி கலெக்டர் செந்தில்ராஜ் அறிவித்துள்ளார். ஆவணி திருவிழாவில் பக்தர்கள் அதிகமாக வருவதால், கொரோனா பரவும் அபாயத்தை தடுக்கும் வகையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஆவணி…
தனியார் பள்ளியை தூய்மை செய்த ஜி.எஸ்.டி வரி ஆணையர்
தூய்மை இந்தியா இயக்கத்தின் ஒரு பகுதியாக சென்னை தெற்கு சேவை மற்றும் சரக்கு வரி ஆணையரகம் மற்றும் சென்னை சேவை மற்றும் சரக்கு வரி தணிக்கை ஆணையரகங்களின் சார்பில் 16. 8 .21 முதல் 31. 8 .21 வரை தூய்மை…
தடுப்பூசி செலுத்துவதில் மத்தியப் பிரதேசம் புதிய சாதனை
மத்தியப் பிரதேசத்தில் நேற்று (புதன்கிழமை) மட்டும் 24.20 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் ஒரே நாளில் செலுத்தப்பட்டுள்ளன. இது அந்த மாநிலத்தில் ஒரு புதிய சாதனை என்று மாநில சுகாதாரத்துறை தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. கடந்த ஜூன் 21 அன்று 17.62…
உள்ளாட்சி தேர்தல்: இரண்டு முக்கிய கட்சிகளுடன் கூட்டணி இருக்காது – கமல்ஹாசன்
தமிழகத்தில் விடுபட்ட போன காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட 9 மாவட்டங்களில் செப்டம்பர் 15க்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்து, மாநில தேர்தல் ஆணையமும் உள்ளாட்சி தேர்தலுக்கான பணிகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், உள்ளாட்சித் தேர்தலில் இரண்டு முக்கிய கட்சிகளுடன்…
நைஜரில் ராணுவ வீரர்களை குறிவைத்து பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் ராணுவ வீரர்கள் 16 பேர் பலி
நைஜரில், போகோ ஹராம் பயங்கரவாதிகள் திஃப்ரா மாகாணத்தில் உள்ள பாரோ நகரில் உள்ள ராணுவ நிலைகளை குறிவைத்து நேற்று திடீர் தாக்குதல் நடத்தினர். பயங்கரவாத தாக்குதலில் 16 நைஜர் ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். மேலும், 9 வீரர்கள் பலத்த காயமடைந்தனர். முன்னதாக…