தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டான சிலம்பப்போட்டியை வளர்க்க வள்ளுநர்குழுவுடன் ஆராய்ச்சி கழகம் அமைக்க வேண்டும் என்று தமிழ்நாடு சிலம்பக்கழகம் வலியுறுத்தியுள்ளது.
தமிழகத்தின் வீர விளையாட்டுகளில் ஒன்றான சிலம்பு விளையாட்டை கேலோ திட்டத்தின் கீழ் இணைத்து மத்திய அங்கரிகரித்துள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் பல ஆயிரம் ஆண்டுகளாக அங்கரிக்கப்படாமல் இருந்த சிலம்பம் விளையாட்டு க்கு அங்கிகாரம் கிடைத்துள்ளதாக சிலம்பம் விளையாட்டு ஆர்வலர்களும், பயற்சியாளர்களும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
மத்திய அரசின் சிலம்ப விளையாட்டு அங்கிகாரத்தையடுத்து, தமிழ்நாடு சிலம்பக்கழக உறுப்பினர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய தமிழ்நாடு சிலம்பக்கழகம் மாநில தலைவர் பாலகிருஷணன், பல ஆயிரம் ஆண்டு பாரம்பரிய தமிழர் விளையாட்டை மத்திய அரசு அங்கிகரித்துள்ளதற்கு மகிழ்ச்சி தெரிவித்ததோடு, இந்த விளையாட்டில் கைத்தேர்ந்த ஆசிரியர்களை கொண்டு ஆராய்சி கழகம் அமைத்தால் இந்த விளையாட்டு மேலும் வளர்ச்சிபெறும் என்றார்.