உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் சார்பில் ஆண்டுதோறும் உணவு பாதுகாப்பு குறியீடு வெளியிடப்படுகிறது.
அந்த வகையில், மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா இது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையின்படி, முதன்மை மாநிலங்களின் பட்டியலில் குஜராத் முதலிடத்திலும், கேரளா மற்றும் தமிழ்நாடு இரண்டாமிடத்திலும் உள்ளது. மேலும், சிறிய மாநிலங்களின் பட்டியலில் கோவா முதலிடத்திலும், மேகாலயா மற்றும் மணிப்பூர் அடுத்தடுத்த இடத்திலும் உள்ளது.