தி காஷ்மீர் ஃபைல்ஸ் படத்திற்கு வரிவிலக்கு

 

தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ படத்தை யூடியூப்-ல் வெளியிடக் கோரி ஆம் ஆத்மி எம்பி சஞ்சய் சிங் மாநிலங்களவையில் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் வழங்கியுள்ளார்.

தி காஷ்மீர் ஃபைல்ஸ் படத்திற்கு வரிவிலக்கு அளிக்க வேண்டும் என அப்படத்தின் இயக்குநர் விவேக் அக்னிகோத்ரி டெல்லி அரசை வலியுறுத்தி வருகிறார்.

இந்நிலையில், கடந்த வாரம் நடைபெற்ற டெல்லி சட்டசபை கூட்டத்தொடரின்போது மாநிலத்தில் தி காஷ்மீர் ஃபைல்ஸ் படத்திற்கு வரிவிலக்கு அளிக்க வேண்டும்” என்று பாஜகவினர் கோரிக்கை வைத்தனர். இதற்கு பதிலளித்த முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், படத்தை அனைவரும் பார்க்க வேண்டும் என்றால் படத்தை யூடியூப்பில் பதிவேற்ற விவேக் அக்னிகோத்ரியை பாஜகவினர் கேட்க வேண்டும் என பதிலளித்திருந்தார்.

இந்நிலையில் தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ படத்தை யூடியூப் மற்றும் தூர்தர்ஷனில் வெளியிடக் கோரி மாநிலங்களவையில் உடனடி விவாதம் நடத்த வேண்டும் என ஆம் ஆத்மி எம்பி சஞ்சய் சிங் அவை ஒத்திவைப்பு தீர்மானம் வழங்கியுள்ளார்.

 

Translate »
error: Content is protected !!