திருவள்ளூர் மாவட்டம் வல்லூர் அனல் மின் நிலையத்தில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக 500 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. அத்திப்பட்டு புதுநகரில் தேசிய அனல் மின் கழகமும், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகமும் இணைந்து கூட்டு நடவடிக்கையாக வல்லூர் அனல் மின் நிலையம் நிறுவப்பட்டு மூன்று அலகுகளில் தலா 500 மெகாவாட் என மொத்தம் ஆயிரத்து 500 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. மேலும், தொழில்நுட்ப கோளாறு காரணமாக மூன்றாவது அலகில் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், ஊதிய உயர்வு, பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஒப்பந்த தொழிலாளர்கள் மேற்கொண்டு வரும் வேலை நிறுத்த போராட்டம் 5ஆவது நாளாக நீடித்து வருகிறது.