திருவாரூர் மாவட்டத்தில் நேற்று திருவாரூர் மாவட்ட பொறுப்பு அமைச்சரும் உணவுத்துறை அமைச்சருமான சக்கரபாணி இரண்டு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் திடீர் ஆய்வு நடத்தினார். அதில் கொரடாச்சேரி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஊற்குடி நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் ஆய்வு செய்தார்.
அப்பொழுது நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் பணியாற்றும் பட்டியல் எழுத்தர் மற்றும் உதவியாளர் விவசாயிகளிடமிருந்து அரசு நிர்ணயித்த ஈரப்பத அளவான 17 சதவீதத்திற்கும் மேலாக 20% உள்ள நெல்லை கொள்முதல் செய்துள்ளது தெரியவந்தது.
இதை எடுத்து துறை ரீதியிலான விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க திருவாரூர் மாவட்ட நுகர்பொருள் வாணிபக் கழகம் மேலாளர் ராஜ ராஜனுக்கு அமைச்சர் சக்கரபாணி உத்தரவிட்டார்.
அமைச்சர் உத்தரவின் பேரில் துறை ரீதியான விசாரணை மேற்கொண்ட திருவாரூர் மாவட்ட நுகர்பொருள் வாணிபகழகம் மேலாளர் ராஜராஜன் ஊர்ககுடி நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் பணியாற்றும் பட்டியல் எழுத்தர் மற்றும் உதவியாளர் ஆகிய இருவரையும் தற்காலிக இடைநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.