‘குக் வித் கோமாளி’ புகழ் காதலி பென்சியாவை திருமணம் செய்து கொண்டார். பல்வேறு தரப்பினரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்த நிலையில், அனைவருக்கும் நன்றி கூறியுள்ளார் புகழ்.
இதுகுறித்து கூறிய அவர், ”எங்கள் திருமணத்திற்கு வாழ்த்திய தொலைக்காட்சி, ஊடக நண்பர்கள், உறவினர்கள், நலன்விரும்பிகள், என் உயர்வுக்கு ஏணியாய் இருந்து உதவும் ரசிகர்களுக்கு மனமார்ந்த நன்றி” என்று கூறியுள்ளார்.