11 அணிகள் பங்கேற்கும் 8-வது ஐஎஸ்எல் கால்பந்து போட்டி ரசிகர்களின்றி இன்று துவக்கம் – கோவா

எட்டாவது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி இன்று கோவாவில் துவங்குகிறது. கோவாவிலுள்ள 3 மைதானங்களில் ரசிகர்களின்றி நடைபெறும் இந்த போட்டி கொரோனா விதி முறையை பின்பற்றி மார்ச் மாதம் வரை நடைபெற உள்ளது. இதில் நடப்புச் சாம்பியன் மும்பை சிட்டி  மற்றும் சென்னையின் எப்சி, பெங்களூர், கோவா, கேரளா பிளாஸ்டர்ஸ், ஈஸ்ட் பெங்கால், கவுகாத்தி, ஐதராபாத் என மொத்தம் 11 அணிகள் கலந்து கொண்டு விளையாட உள்ளனர். இதில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா 2 போட்டிகளில் மோத வேண்டும் எனவும், லீக் சுற்றுகள் முடிவில் முதல் 4 இடம் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும் எனவும் கூறப்பட்டுள்ளது. அதேபோல கடந்து ஐஎஸ்எல் போட்டிகளை விட இந்த முறை நடைபெற உள்ள போட்டிகளில் ஒரு சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது எனவும், அதாவது கடந்த முறை நடைபெற்ற ஐஎஸ்எல் போட்டிகளில் ஒரு அணியில் 5 வெளிநாட்டு வீரர்கள் களம் இறங்கலாம், ஆனால் இந்த முறை மூன்று வெளிநாட்டு வீரர்களும் ஒரு ஆசியா வீரர்களும் என நான்கு வீரர்கள் மட்டுமே ஒரு அணியில் களம் இறங்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Translate »
error: Content is protected !!