மும்பை: மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 31 புள்ளிகள் உயர்ந்து 60,078 புள்ளிகளில் முடிவடைந்தது. காலை வர்த்தகத்தில், சென்செக்ஸ் 364 புள்ளிகள் அதிகரித்து 60,412 ஆக இருந்து இறங்கியது. தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி குறியீடு எண் 2 புள்ளிகள் உயர்ந்து 17,855 ஆக உள்ளது.