டைரக்டர் சங்கரை தொடர்ந்து டைரக்டர் ராஜீவ் மேனனின் மகளும் கதாநாயகியாக அறிமுகமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் பிரபல திரைப்பட நடிகர், இயக்குநர்களின் வாரிகள் களமிறங்குவது தற்போது அதிகரித்து வருகிறது. அந்த வகையில், பிரபல இயக்குநர் சங்கரின் மகள் அதிதி தமிழ் திரையுலகில் நடிகையாக அறிமுகமாகவுள்ளார். இவருக்கு ஜோடியாக நடிகர் கார்த்தி நடிக்கவுள்ளார்.
இவரை தொடர்ந்து தற்போது பிரபல ஒளிப்பதிவாளரும், இயக்குனருமான ராஜீவ் மேனனின் மகள் சரஸ்வதியும் நடிகையாக அறிமுகமாகிறார். தரமணி பட நடிகர் வசந்த் ரவி கதாநாயகனாக நடிக்கும் புதிய படத்தில் ராஜீவ் மேனனின் மகள் சரஸ்வதி அவருக்கு ஜோடியாக நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.