“மனசு ரொம்ப வலிக்குது” -ரசிகர்கள் கவலை

கொரோனா பரவல் அதிகரித்துள்ள சூழலில், வலிமை திரைப்படம் ரிலீஸ் தேதி ஒத்தி வைக்கப்பட்டுள்ளதால்  “மனசு ரொம்ப வலிக்குது” என அஜித் ரசிகர்கள் போஸ்டர்களை ஒட்டியுள்ளனர். நடிகர் அஜித் நடிப்பில் வலிமை திரைப்படம் தயாராகி உள்ளது. கொரோனா பரவலால் நீண்ட நாட்களாக இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வந்த நிலையில், ஒரு கட்டத்தில் படப்பிடிப்பு முடிந்து ரிலீஸ் தேதியும் அறிவிக்கப்பட்டது. ஆனால் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்துள்ளதால் ரிலீஸ் தேதி தள்ளிப்போனது. இதனால் வேதனை அடைந்த கோவையை சேர்ந்த அஜித் ரசிகர்கள், ரயில் நிலையம் அருகே, “ஏமாற்றம்! ஏமாற்றம்!! ஏமாற்றம்!!! மனசு ரொம்ப வலிக்குது… it’s ok” என்று அச்சிட்டு தங்களைது கவலையை வெளிப்படுத்தியுள்ளனர்.

Translate »
error: Content is protected !!