2 வது அலையை விட 3 மடங்கு பாதிப்பு அதிகமாக இருக்கும் – செயலாளர் ராதாகிருஷ்ணன்

நாடு முழுவதும் கொரோனா மற்றும் ஓமைக்ரான் நோய்த் தொற்று வேகமாகப் பரவி வரும் சூழலில், தமிழகம் உட்பட 8 மாநிலங்கள் கவலைக்குரிய நாடுகள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் நேற்று 17,934 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.

இந்நிலையில், சளி, இருமல், காய்ச்சல் இருந்தால், பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்று
சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், “ஒமைக்ரான் தொற்று வேகமாக பரவி வருகிறது. 2வது அலையை விட 3 மடங்கு பாதிப்பு அதிகமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் பூஸ்டர் தடுப்பூசி பெற தகுதியுடையவர்கள். மக்கள் தாமாக முன்வந்து 2வது தவணை கொரோனா தடுப்பூசியை செலுத்த வேண்டும்” என்றார்.

Translate »
error: Content is protected !!