நடிகர் பார்த்திபனின் “ஒத்த செருப்பு சைஸ் 7” திரைப்படம் இந்தோனேஷிய பஹாசா மொழியில் உருவாகும் முதல் தமிழ் படம் எனும் பெருமையை பெற்றுள்ளது. புகழ்பெற்ற பன்முக ஆளுமையான பார்த்திபனின் ‘ஒத்த செருப்பு சைஸ் 7’ தமிழ் திரைப்பட வரலாற்றில் மட்டுமின்றி உலகளவில் பெரும் கவனத்தை பெற்று பல்வேறு விருதுகளையும் பெற்றது. இந்த நிலையில், இந்த படம் இந்தோனேசியாவின் பஹாசா மொழியில் ரீமேக் செய்யப்படுகிறது. இந்தோனேசியாவில் ரீமேக் செய்யப்படும் முதல் தமிழ் திரைப்படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.