இலங்கையில் போராட்டம் நடைபெறாத இடங்களிலும் காவல்துறையினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசி வரும் வித்தியாசமான நிகழ்வு அரங்கேறி வருகிறது. பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் பொதுமக்கள் அரசுக்கு எதிராக தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.
பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு வழி தெரியாத அதிபர் கோத்தபய, காவல்துறையையும் ராணுவத்தையும் மக்கள் மீது ஏவி விட்டுள்ளார். அவர்களும் எரிபொருள் கேட்போரை எட்டி உதைப்பது, குவிந்து நிற்கும் மக்களை தண்ணீரைப் பீய்ச்சியடித்து குளிப்பாட்டுவது என்று நடந்து கொள்கிறார்கள்.
அந்தவகையில் கொழும்புவில் போராட்டம் ஒரு பகுதியில் நடந்து கொண்டிருக்க, சீரான போக்குவரத்து இருந்த சாலைகளில் தேவையில்லாமல் கண்ணீர் புகை குண்டுகளை வெடித்து காவல்துறை வேடிக்கைக் காட்டிக் கொண்டிருக்கிறது. அவர்களின் இத்தகைய அச்சுறுத்தும் போக்குக்கு இலங்கை மக்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.