கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிக்கையையொட்டி தோவாளை மலர் சந்தையில் மல்லிகை பூ, பிச்சிபூ விலை கடுமையாக உயர்ந்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் தோவாளையில் அமைந்துள்ள மலர் சந்தைக்கு மதுரை, ஓசூர், ராயக்கோட்டை, பெங்களூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பூக்கள் வரத்து அதிகளவில் இருந்து வருகிறது. எனினும் நாளை கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில் இந்த மலர் சந்தையில் மல்லிகை, பிச்சிபூ விலை கடுமையாக உயர்ந்துள்ளது. நேற்று கிலோ ஒன்று ஆயிரத்து 500 ரூபாய்க்கு விற்கப்பட்ட மல்லிகை பூ, இன்று 3 ஆயிரம் ரூபாய்க்கும், ஆயிரத்து 500 ரூபாய்க்கு விற்கப்பட்ட பிச்சிப்பூ 2 ஆயிரம் ரூபாய்க்கும் விற்கப்படுவதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்