ஏற்கனவே அறிவித்தபடி கல்லூரிகளில் ஆன்லைன் தேர்வு நடத்தப்படும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்தார். இது தொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறியது:-
“கொரோனா பரவல் காரணமாக கடந்த டிசம்பரில் நடக்கவிருந்த செமஸ்டர் தேர்வுகள் பிப்ரவரி 1-ம் தேதி ஆன்லைனில் நடைபெறும் என்று ஏற்கனவே அறிவித்திருந்தோம். இப்போது கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளதால், ஆன்லைன் தேர்வுகளில் மாற்றம் குறித்து பலருக்கு சந்தேகம் உள்ளது.
இதுகுறித்து முதல்வர் ஸ்டாலினிடம் பேசியபோது, கல்லூரிகளில் முதல், மூன்று மற்றும் ஐந்தாம் செமஸ்டர் தேர்வுகள் ஏற்கனவே அறிவித்தபடி ஆன்லைனில் நடத்தப்படும் என்றார். எனவே ஆன்லைன் தேர்வுகள் நடத்தப்படும் முறையில் எந்த மாற்றமும் இல்லை, ”என்று அமைச்சர் கூறினார்.