பிரிட்டன் வரும் பயணிகளில், தடுப்பூசி செலுத்திக் கொண்டோருக்கு கொரோனா பரிசோதனையிலிருந்து விலக்கு அளிக்கப்படுவதாக பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவித்துள்ளார்.
கொரோனாவால், ஐரோப்பிய நாடுகளில் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகள் பட்டியலில் பிரிட்டன் 2-வது இடத்தில் உள்ளது. கடும் கட்டுப்பாடு காரணமாக சுற்றுலாப் பயணிகள் வருகையும் குறைந்ததால், பொருளாதார நெருக்கடியையும் அரசு சந்தித்தது. இந்தநிலையில், தற்போது கொரோனா பரவல் குறையத் தொடங்கியதால் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அந்தவகையில், பிரிட்டன் வரும் பயணிகள் தடுப்பூசி செலுத்தியிருந்தால்,கொரோனா பரிசோதனை தேவையில்லை என்று பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார். தொழில், மற்றும் சுற்றுலா வளர்ச்சிக்கான வாசல்கள் திறக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். பிரதமரின் அறிவிப்புக்கு பிரிட்டன் விமான சேவை நிறுவனங்கள் வரவேற்பு தெரிவித்துள்ளன.