ரயில்வே துறையை தனியார்மயமாக்கும் எண்ணம் இல்லை

 

இந்திய ரயில்வேயை தனியார்மயமாக்கும் எண்ணம் இல்லை என மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

இந்திய ரயில்வேயை தனியார்மயமாக்க முயற்சி நடப்பதாக நாடாளுமன்றத்தில் குற்றஞ்சாட்டிய எதிர்கட்சி எம்.பிக்கள், அம்முயற்சிக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்தநிலையில் மக்களவையில் உரையாற்றிய ரயில்வேதுறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், ரயில்வே துறையை தனியார்மயமாக்கும் எண்ணம் மத்திய அரசுக்கு துளியும் இல்லை என கூறினார்.

அதுமட்டுமல்லாது சரக்கு ரயில் தடங்களும் தனியார்மயமாக்கப்படாது என்றும், ரயில்வே துறையில் காலியாக உள்ள  ஒரு லட்சத்து 14 ஆயிரம் இடங்களை நிரப்பும் பணி நடைபெற்று வருவதாகவும் தெளிவுப்படுத்தினார்.

 

Translate »
error: Content is protected !!