சுதந்திர தினத்தன்று மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் முதலமைச்சரும் , குடியரசு தினத்தில் கவர்னரும் தேசியக் கொடி ஏற்றுவது வழக்கம். புதுவையை பொறுத்தவரை தெலுங்கானா ஆளுநராக தமிழிசை சவுந்தரராஜன் பொறுப்பு ஆளுநராக உள்ளார்.
தெலுங்கானாவில் குடியரசு தின விழாவில் தேசியக் கொடியை ஏற்றிவைத்துவிட்டு, தனி விமானம் மூலம் புதுச்சேரி வந்த தமிழிசை சவுந்தரராஜன், புதுவை கடற்கரை சாலையில் உள்ள காந்தி ஸ்டேடியத்தில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.
இந்நிலையில், குடியரசு தினத்தன்று இரு மாநிலங்களிலும் கொடியேற்றுவதை அரசியலாக்க தேவையில்லை என புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கேட்டுக்கொண்டுள்ளார்.