கார்த்திகை தீபத் திருவிழா வருகிற 7ஆம் தேதி தொடங்கி 23ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் 17ஆம் தேதி முதல்20 ஆம் தேதி வரை தவிர்த்து இதர நாட்களில் பக்தர்கள் அனுமதிக்கப்படுவர். திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோயிலில் 17 நாட்கள் நடைபெறும் தீபத்திருவிழா நாளில் உள்ளூர் பக்தர்கள் முவ்வாயிரம் நபர்களும் வெளியூர் மற்றும் வெளி மாநில பக்தர்கள் பத்தாயிரம் நபர்களும் மொத்தம் 13000 ஆயிரம் பக்தர்கள் கலந்து கொள்ள முடியுமெனவும், இதில் திருவண்ணாமலை மாவட்டத்தை சார்ந்த பக்தர்களுக்கான அனுமதி சீட்டு கோவில் வளாகத்திலும் வெளியூர் பக்தர்களுக்கு அருணாச்சலேஸ்வரர் கோவிலில் www.arunachaleshwarartemple.tnhrce.in என்ற இணையதளத்தின் மூலமாகவும் கட்டணமில்லா முன்பதிவு செய்து அனுமதி பெற்று வரும் நபர்களை மட்டும் அருணாச்சலேஸ்வரர் கோவிலில் அனுமதிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் முருகேஷ் அறிவித்துள்ளார்.