உலக பொருளாதார கூட்டமைப்பின் உச்சி மாநாடு நேற்று தொடங்கியது. சீன அதிபர் ஜி ஜின் பிங்கின் சிறப்புரையுடன் மாநாடு தொடங்கியது. இந்த மாநாட்டில் காணொலி காட்சி மூலம் இந்திய பிரதமர் மோடி பங்கேற்றார்.
மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி, “இந்தியாவை உலகின் கவர்ச்சிகரமான முதலீட்டு இடமாக மாற்ற பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் முதலீடு செய்ய இதுவே சரியான நேரம். இந்திய இளைஞர்கள் தொழில்புரிவதற்கான ஆர்வத்தில் உள்ளனர். புதிய தொழில்நுட்பத்தை உருவாக்கி அதை ஏற்றுக்கொள்ள ஆர்வமாக உள்ளனர்” என்றார்.