நவம்பர் 4 தீபாவளியை முன்னிட்டு, சென்னையில் நவம்பர் 1-4 தேதி 18,000 போலீசார் பாதுகாப்பு பண்ணியில் ஈடுபட உள்ளதாக சென்னை பெருநகர போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறியது, சென்னையில் காலை 6-7 மணி மற்றும் இரவு 7-8 மணி என 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்கலாம். நேர கட்டுப்பாட்டை மீறி பட்டாசு வெடித்தால் சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கப்படும். கடந்த ஆண்டு விதிகளை மீறி பட்டாசு வெடித்ததாக 383 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. சென்னையில் 683 பட்டாசு கடைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.