வைகை ஆற்றில் மணல் திருட்டு, உரிய நடவடிக்கை எடுக்க கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
தேனி மாவட்டம் வருசநாடு மலைப்பகுதியில் உருவாகும் வைகை ஆறு திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் பெரிய கண்மாய் சென்றடைகிறது. வைகையாற்றை நம்பி ராமநாதபுரம் மாவட்டத்தில் பருத்தி, மிளகாய் உள்ளிட்டவை விவசாயம் செய்யப்படுகிறது. மேலும் குடிநீர் ஆதாரமாக விளங்குகிறது. பரமக்குடி அருகே மந்தி வலசை, பொட்டிதட்டி, சிறகிக்கோட்டை, கல்லடியேந்தல் உள்ளிட்ட வைகையாற்றை ஒட்டியுள்ள கிராமங்களில் இரவு நேரங்களில் தொடர்ந்து மணல் திருடப்பட்டு வருகிறது. அதிகளவில் மணல் திருடப்படுவதால் வைகை ஆற்றில் மெகா சைஸ் பள்ளங்கள் உருவாகியுள்ளது. எனவே இது குறித்து கிராம மக்கள் போலீசார் மற்றும் வருவாய்த் துறைக்கு தகவல் அளித்தாலும் மணல் திருட்டை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை வைத்துள்ளனர்.