வேளாண்மையை ஊக்குவிக்கும் வகையில் புதுச்சேரியில் நடைபெற்ற பாரம்பரிய திருவிழாவில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர். புதுச்சேரி அரசின் வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை சார்பில் நடத்தப்பட்ட இந்த விழாவை வேளாண்துறை அமைச்சர் ஜெயக்குமார் துவக்கி வைத்தார். இதில் சீரகசம்பா கிச்சிலி சம்பா, கருப்புகவுனி, சேலம் சம்பா, மாப்பிள்ளை சம்பா, கருங்குறுவை, உள்ளிட்ட பாரம்பரிய நெல்கள் வைக்கப்பட்டு விளக்கம் அளிக்கப்பட்டது. இந்த விழாவில் கலந்து கொண்ட 300 விவசாயிகளுக்கு பாரம்பரிய நெல் ரகங்களின் கையேடு மற்றும் 2 கிலோ நெல் விதை இலவசமாக வழங்கப்பட்டன.