மதுரையில் மாபெரும் உண்ணாவிரத போராட்டம்

முல்லைப் பெரியாறு பிரச்சனை காரணமாக மத்திய அரசை கண்டித்து வரும் மார்ச் 15ஆம் தேதி மதுரையில் மாபெரும் உண்ணாவிரத போராட்டம் நடத்த போவதாக விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் தெரிவித்துள்ளார். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர் இதனை தெரிவித்தார். மேலும் , மத்திய அரசு திட்டமிட்டு தமிழகத்தில் அரசியல் அதிகார மோகத்தோடு மக்களை பிளவுபடுத்த முயற்சிக்கிறது என்றும், நீட் தேர்வு பிரச்சனைகளைத் திசை திருப்புவதற்காக முல்லைப் பெரியாறு அணை வலுவில்லை என்று மத்திய அரசு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருப்பதாகவும் குற்றம் சாட்டினார்.

Translate »
error: Content is protected !!