நவராத்திரி விழாவில் பாரம்பரிய சிலம்பாட்டம்

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே வல்லன்குமாரன்விளை ஊர் பொதுமக்கள் நடத்தும் நவராத்திரி விழாவில் தமிழரின் பாரம்பரிய சிலம்பாட்ட விளையாட்டுக்கள் நடைப்பெற்றன.

வல்லன்குமாரன்விளை முத்தாரம்மன் கோவில் சார்பில் ஆண்டுதோறும் நவராத்திரியையொட்டி பல்வேறு விசேஷ,கலை  நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன் தொடர்ச்சியாக இன்று கோவில் வளாகத்தில் தமிழரின் பாரம்பரிய சிலம்பாட்ட போட்டிகள் நடந்தன. இதில் ஏராளமான பள்ளி மாணவ மாணவிகள் சிறுவர்-சிறுமிகள் கலந்துகொண்டு  தமிழரின் அடிமுறை கலை எடுத்தெறிதல், ஆயுத விளையாட்டுகம்பு சுற்றுதல் போன்ற பல்வேறு வீர விளையாட்டுகளை சாகசங்களாக செய்து காட்டினர். இந்த நிகழ்ச்சியை பார்வையாளர்களை வெகுவாக ரசித்தனர்.

Translate »
error: Content is protected !!